வைஸ் அட்மிரல்
கான்சன பானகொட
ஆர்எஸ்பீ, யூஎஸ்பீ, என்டீசீ, பீஎஸ்சீ
மேலும், அவர் 2009 இல் பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் படிப்பையும், 2019 இல் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்காங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டத்தையும் வெற்றிகரமாக முடித்தார். 2022 ஆம் ஆண்டில், கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த்துடன், மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மேலாண்மை மற்றும் வணிக நிர்வாக முதுகலைப் பட்டங்களை (மனித வள முகாமைதத்துவம்) முடித்தார்.
இதன்படி,தனது 36 வருட சேவை காலத்தில் விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி அதிகாரிகளின் ஆலோசகராகவும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும், சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் ஆலோசகராக இரண்டு தடவைகள் கடமையாற்றியுள்ளார்.கடற்படை மற்றும் கடல்சார் பயிற்சி கல்லூரியின் பயிற்சி இயக்குநர் , சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை மற்றும் கட்டளை பணியாளர் கல்லூரி பயிற்சி குழு தலைவர், கடற்படை பயிற்சி பணிப்பாளர், பதில் இயக்குனர் ஜெனரல் பயிற்சி, தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி (பாணம), வட மத்திய கடற்படை கட்டளை தளபதி (தலைமன்னார்), வடக்கு கடற்படை கட்டளை தளபதி(காங்கேசன்துறை) மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியாக(திருக்கோணமலை) வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் கடமை புரிந்துள்ளதுடன், கெளரவ ஜனாதிபதி அவர்களால் 26 வது கடற்படை தளபதியாக 2024 டிசம்பர் 31 ஆம் திகதி நியமிக்கப்படுவதற்கு முன்னர் , 2024 ஆகஸ்ட் 16 முதல் கடற்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
துணிச்சலான நடவடிக்கைகளுக்காக ரண சூர பதக்கமும் (RSP), களங்கமற்ற தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா (USP)பதக்கமும் பெற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை கடற்படைக் கப்பலான சயுரல கப்பலின் மூலம் ஆழ்கடலில் பாரிய அளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மூன்று படகுகளையும் அப் படகின் குழுவினரையும் கைப்பற்றிய வெற்றிகரமான நடவடிக்கைக்காக இலங்கை கடற்படைத் தளபதியினால் பாராட்டுக்களையம் பெற்றுள்ளார்.
வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஐக்கிய இராச்சிய கடற்படை நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றுகிறதுடன்,முழு தீவுக்கும் சமாதான நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பொழுதுபோக்குகளில் ராக்கெட் விளையாட்டு, சுற்றுலா பயணம் , ஆய்வு செய்தல் , புகைப்படம் எடுத்தல், வாசிப்பு மற்றும் இசை ஆகியவை அடங்கும். வைஸ் அட்மிரல் கான்சன பானகொட திருமதி அனுஷாவை மணந்துள்ளதுடன், அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.